கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு முயற்சி – ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாதனை!

Monday, March 23rd, 2020

ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்ததால், அதே மருந்து கலவையை 50 மருத்துவமனைகளில் இருக்கும் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசியமாக நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் எச்.ஐ.வி க்கான கலேட்ரா மருந்தும் மலேரியா சிகிச்சைக்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் இரண்டும் கலந்து கோரோனா பாதித்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன.

Related posts: