கொரொனா வைரஸ்: உயிரிழந்தவர்கள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்!

Friday, April 3rd, 2020

கொரோனா வைரஸ் தொற்றால் இன்றுவரை உலகளாவிய ரீதியில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை நாளாந்தம் ஏற்படுத்தி வருகின்றது.

இருப்பினும் ஐரோப்பிய நாடுகளிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகளாவிய மொத்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அலுவலகத்தின் தலைவர் டாக்டா ஹன்ஸ் க்ளுஜ், கோபன்ஹேகன் நகரில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் காணொளி காட்சி மூலம் பேசினார்.

“கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு புள்ளிவிவரத்தில், ஐரோப்பாவில் பலியானோரில் 95 சதவீதத்துக்கு மேற்பட்டோர் 60 வயதை கடந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் 80 வயதை தாண்டியவர்கள்

Related posts: