கென்யாவில் பேருந்து விபத்து – 14 பேர் உயிரிழப்பு!
Thursday, March 28th, 2019
கென்யா நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டேரா பகுதியில் இருந்து நைரோபி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று லாரி மீது வேகமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தகவலறிந்து பொலிசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
போராட்டங்களை கட்டுப்படுத்த பிரான்ஸில் கடுமையான சட்டத்திருத்தம்!
முடக்க நிலையை படிப்படியாக நீக்க ஜேர்மன் முடிவு - அதிபர் அஞ்சலா மேக்கல்!
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுவிப்பு - ஏழு பேர் நாடு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊ...
|
|
|


