கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலை ஆரம்பம்!
Monday, May 22nd, 2017
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது 250 மெகா வோட் மின் உற்பத்தி வெளியாகும் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவோட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டன. இதில், கடந்த ஏப்ரல் மாதம் முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இரண்டாவது அணு உலையில் கடந்த ஐந்தாம் திகதி டர்பன் வால்வு திடீரென பழுது ஏற்ப்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.தற்போது அதன், திருத்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முன்னாள் பிரதமரிமிருந்து பாரத ரத்னா விருதை மீளப் பெறுமாறு தீர்மானம் !
துரோகிகளை வெளியேற்றி சுத்தம் செய்யவேண்டும் – ரஷ்ய அதிபர் புடின் தெரிவிப்பு!
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சர்வதேச ஊடகங்கள் தகவல்’!
|
|
|


