குற்றவியல் பிரேரணையில் அமெரிக்கா அதிபர் வெற்றி!
Thursday, February 6th, 2020
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் 45ஆவது அதிபரான டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் நடந்த, டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருத்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளில் முறையே 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் தோல்வி அடைந்தது.
Related posts:
ஜி.எஸ்.டி. வரி கணக்கிற்க்கு எளிமையான படிவம் அறிமுகம்
நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – திணறும் இந்திய தேசம்!
ஹைட்டி ஜனாதிபதி படுகொலை!
|
|
|


