குற்றவாளிகளை கொன்றால் பரிசு!
Saturday, May 21st, 2016
பிலிப்பைன்ஸில் குற்றவாளிகளை கொன்றாலோ அல்லது காயப்படுத்தினாலோ ,அதைச் செய்தவர்களுக்குப் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று மேயராக பதவி ஏற்கவுள்ள தோமஸ் ஆஸ்மீனா அறிவித்துள்ளார்.
சந்தேக நபர்களைக் கொன்றால், ஒவ்வொரு கொலைக்கும் தலா சுமார் 1,000 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என சீபு நகரத்தின் புதிய தலைவரான ஆஸ்மீனா அறிவித்திருக்கிறார்.
குற்றவாளிகளிடம் பயத்தை ஏற்படுத்துவது தான் தனது நோக்கம் என இது குறித்து அவர் தெரிவித்திருக்கிறார்.
பணியில் இல்லாத போலீஸ்காரர் ஒருவர் கொள்ளை சம்பவம் ஒன்றை நேரில் கண்டபோது, இரு சந்தேக நபர்களை சுட்டு காயப்படுத்தியதற்கு ஏற்கனவே அவர் பரிசு தொகை வழங்கியிருக்கிறார்.
பிலிப்பைன்ஸில் குற்றங்களை ஒழித்துவிடுவேன் என உறுதியளித்து அதிபராக வர இருக்கும் ரொட்ரிகோ ட்யூட்டெர்த்தின் கூற்றை எதிரொலிப்பதாக மேயரின் கருத்து உள்ளது.
Related posts:
மனித வெடிகுண்டு தாக்குதல்: ஆப்கன் மசூதியில் 20 பேர் பலி!
ஓய்வு பெறுகிறார் கிளென் மெக்ஸ்வெல்!
அமெரிக்கா தன்னை "பூமியில் கடவுளின் தூதுவராக கருதுகின்றது – ரஷ்ய அதிபர் புடின் கடும் குற்றச்சாட்...
|
|
|


