கீதா சூறாவளியால் பிஜி தீவுகள் கடுமையாகப் பாதிப்பு!

பிஜி தீவுகளின் தெற்கு பகுதிகளான வடோவா மற்றும் ஓனோ ஐ லாவ் உள்ளிட்ட சில பகுதிகளை கீதா என்ற சூறாவளி கடுமையாகத் தாக்கியுள்ளது.
மணிக்கு சராசரியாக 275 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் இதனையடுத்து கடும் மழை பெய்துள்ளதாகவும் பிஜி நாட்டின் தேசிய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளியால் அங்குள்ள தெற்கு பகுதிகளில் கிராமப்புறங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓனோ பகுதியில் விவசாய நிலங்கள், கட்டடங்கள் மற்றும் வீடுகள் சூறாவளியால் சேதமடைந்துள்ளன.
இருப்பினும் உயிர் தேசங்கள் குறித்து எதுவித தகவலும் இல்லை. இதேவேளை சூறாவளி பிஜி தலைநகரான குவாவின் தெற்குப் பகுதியை கடந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்படுமா?
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது - உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தால் பரபரப்பு!
கடலில் மூழ்கும் அபாயம் - தலைநகரை மாற்றுகின்றது இந்தோனேசியா!
|
|