கிழக்கு சீனாவை புரட்டிப்போட்ட மெகி சூறாவளி!

கிழக்கு சீனாவில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் 15 பேரை மீட்பு உதவி பணியாளர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.
மேலும், மெகி சூறாவளி காரணமாக ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மலை பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இடிபாடுகள் நொறுங்கி விழுந்ததை தொடர்ந்து 26 பேரை இன்னும் காணவில்லை என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பேஃபெங் கிராமத்தில் நிகழ்ந்த இரண்டாவது நிலச்சரிவில் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.மெகி சூறாவளி தைவானை கிழிந்தெறிந்ததில் நான்கு உயிர்கள் பலியாகின. கடந்த புதன் கிழமையன்று சீனாவில் மெகி சூறாவளி கரையை கடந்துள்ளது.
Related posts:
தமிழக தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல்
அபிநந்தன் உடலில் ரகசிய சிப்?: மருத்துவமனையில் தீவிர சோதனை!
வெடிக்கத் தொடங்கிய மெக்ஸிகோவின் எல் போபோ !
|
|