ஆஸி வெளிவிவகார அமைச்சர்  இராஜினாமா?!

Monday, August 27th, 2018

அமைச்சரவையிலிருந்து பதவி விலக தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தனது புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் குறித்த விபரங்களை வெளியிடவுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்த வருடம் அவுஸ்திரேலிய பொது தேர்தலில் தாம் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து எந்தவிதமான தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.

மெல்கம் ரேன்புல் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறியதன் பின்னர் அந்த பதவிக்காக வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் போட்டியிட்டார். இருப்பினும், அவர் முதலாவது சுற்றிலேயே தோல்வி கண்டார்.

மேற்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த 62 வயதான அவர் கடந்த 20 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: