கிறிஸ்தவ மதகுருக்கள் இருவர் கடத்தி கொலை!
Tuesday, September 20th, 2016
மெக்ஸிகோவில் தேவாலயம் ஒன்றிலிருந்து துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்ட ரோமன் கத்தோலிக்க பாதிரியர்கள் இருவர் கடத்தப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
போஸா ரிக்கா நகரின் சாலை ஒன்றின் ஓரமாக அவர்களின் உடல்கள் வீசப்பட்டிருந்தன.அவர்களோடு கடத்தப்பட்ட ஓட்டுநர் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த பாதிரியார்கள் கொல்லப்பட்டதற்கான நோக்கம் தெரியவில்லை. மெக்ஸிகோவின் வளைகுடா கடற்கரை பிராந்தியம் போதை மருந்து போட்டி குழுக்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts:
சபாநாயகர் மைக் மீண்டும் உடைப்பு: 3 மணிக்கு அவை ஒத்திவைப்பு!
தலைநகரில் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்!
இங்கிலாந்தில் உச்சமடையும் வெப்பம் - வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருந்த பகுதிகள் தற்போது மோசமான நிலையை...
|
|
|


