கிரைமியாவில் உக்ரைனின் ஒளிபரப்புகளைத் தடை செய்யவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

Sunday, December 4th, 2016

கிரைமியாவிற்குள் உக்ரைனின் ஒளிபரப்புகளைத் தடை செய்யவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் தீபகற்பமான கிரைமிவிற்கு மிக அருகில் ட்ரான்ஸ் மிட்டர்களை உக்ரைன் கட்டமைக்க தொடங்கியதை அடுத்து, அதன் ஒளிபரப்புகளைத் தடை செய்யவுள்ள நகர்தலை மேற்கொண்டுள்ளதாக ரஷ்ய அமைச்சர் திமித்ரி போலோன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கிரைமியா, ரஷ்யாவுடன் 2014ல் இணைத்துக்கொள்ளப்பட்டது. உக்ரைன் ஊடகத்தினால் செய்யப்படும் ஒளிபரப்பு ரஷ்யாவின் சட்டத்தை மீறுவதாக அமையும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில், சோங்கார் என்ற இடத்தில் 150 மீட்டர் உயர ஒளிபரப்புக் கோபுரத்தை உக்ரைன் கட்டமைக்கத் தொடங்கியது.

_92817735_gettyimages-481815067

Related posts: