கிரேக்க தீவுகளில் உள்ள அகதிகளுக்கு சிக்கல்!
Wednesday, August 17th, 2016
அகதிகளின் வரவு அதிகளவில் அதிகரித்திருப்பதால் கிரேக்கத் தீவுகளில் உள்ள குடியேறிகளின் நிலைமை சீரழிந்து வருவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த அறக்கட்டளை அமைப்பொன்று எச்சரித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் பாதியில் சாமோஸ்,கிரேக்க தீவுகளில் வருகை புரிந்த குடியேறிகளின் எண்ணிக்கை கடந்த மாதத்தின் (ஜுலை) முதல் பகுதியில் இத்தீவுகளுக்கு வந்த குடியேறிகளின் எண்ணிக்கையை காட்டிலும் கிட்டத்தட்ட 150 சதவீதம் அதிகம் இருந்ததாக ‘சேவ் தெ சில்ட்ரன்’’ என்ற அந்த அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.
அடிப்படை வசதிகளான குளியல் வசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் ஆகியவற்றை பெறுவதில் குடியேறிகள் சிரமங்களை மேற்கொள்வதாக அந்த அறக்கட்டளை அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
குடியேறிகள் தங்கும் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், உண்மையான அகதிகளை மற்ற உறுப்பு நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் திட்டங்களை விரைவுபடுத்தும் பணியினையும் ஐரோப்பிய ஒன்றியம் செய்ய வேண்டும் என்று ‘சேவ் தெ சில்ட்ரன்’’ அறக்கட்டளை விருப்பம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|
|


