காற்று மாசுபடுவதால் சீனா, இந்தியா, கம்போடியாவில் பெரும் பாதிப்பு!

Friday, September 9th, 2016

காற்று மாசுபடுவதால் உலகளவில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க ஆகும் செலவுகள் குறித்த புதிய அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

உலகளவில் மரணங்கள் ஏற்படுவதற்கு நான்காவது பெரிய காரணமாக காற்று மாசு உள்ளது எனவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

புகைபிடிப்பதால் ஏற்படும் மரணங்களைப் போல பத்து சதவீத இறப்புகளுக்கு காற்றுமாசு காரணமாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்று மாசு காரணமாக சர்வதேச அளவில் 200 பில்லியன் டாலர் பொருளாதார விரயம் ஏற்பட்டுள்ளது. சீனாவே இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மொத்த தேசிய வருமானத்தில் பத்தில் ஒரு பகுதி காற்று மாசுபடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கவும், நலத்திட்டங்களுக்காவும் செலவாகிறது.மனித உழைப்பு நாட்களும் காற்று மாசு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன.

இந்தியா மற்றும் கம்போடியாவிலும் கூட, காற்று மாசு காரணமாக தேசிய மொத்த உற்பத்தியில் எட்டு சதவீதம் செலவாகிறது.கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் உலக வங்கியின் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

160221055215_cn_beijing_smog_mask_624x351_reuters_nocredit

Related posts: