கார் குண்டு வெடித்ததில் வட சிரியாவில் 40 பேர் பலி!
Sunday, January 8th, 2017
வட சிரியா நகரான அஸாசில் மிகப்பெரிய கார் குண்டு ஒன்று வெடிக்க வைக்கப்பட்டதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கி உடனான எல்லைப்பகுதியில், போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகரிலிருந்த மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப்பகுதி ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளது.ஐ.எஸ் குழு இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் சந்தேகிக்கின்றனர்.
போராளி குழுக்களுக்கு முக்கிய விநியோக பாதையாக அஸாஸ் இருக்கிறது.பல்வேறு குழுக்கள் இந்நகருக்காக சண்டையிட்டுள்ளனர்.ஒரு கட்டத்தில் பல மாதங்களாக ஐ.எஸ் தீவிரவாதிகள் இதனை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
தற்போது, துருக்கி ஆதரவு பெற்ற போராளிகளின் வசம் உள்ளது.கடந்த ஆண்டு அலெப்போ நகருக்கான போர் நடைபெற்றதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய மிகப்பெரிய எண்ணிக்கையிலான பொதுமக்கள் பலர் இந்த நகரில் குடியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


