காபூலில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 95 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் சக்திவாய்ந்த அம்பியூலன்ஸ் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 95 பேர் பலியாகியுள்ளதுடன் 158 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐரோப்பிய ஒன்றிய அலுவலகங்கள் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதிக்குள் வெடிகுண்டு நிறைந்த அம்பியூலன்ஸ் ஒன்றை தீவிரவாதிகள் ஓட்டிச்சென்றுள்ளனர்.
பொலிஸ் சோதனைச் சாவடியின் அருகே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் பகல் 12.15 மணியளவில், அம்பியூலன்ஸில் இருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.
இதில், சம்பவ இடத்திலேயே 95 பேர் உடல் சிதறி பலியாகினர். 158 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.பலர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பாக காபூலில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|