காசா விவகாரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்ரேலியாவின் கிறீன்ஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு!
Monday, November 6th, 2023
அவுஸ்திரேலிய அரசாங்கம் காசா விவகாரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிறீன்ஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
நேர்மையற்ற வார்த்தைகள் யுத்த குற்றங்களை தடுக்க உதவப்போவதில்லை என கிறீன்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெஹ்றீன் பாருக்கி தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்ப்பை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்போவதாக தெரிவித்துள்ள அவர் சுதந்திர பாலஸ்தீனம் என கோசம் எழுப்பினார்.
இதன் பின்னர் கிறீன்ஸ்கட்சியின் செனெட்டர்கள் 11 பேரும் வெளிநடப்பு செய்துள்ளனர். ஜெனெட் ரைஸ் பாலஸ்தீன கொடியை காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!
பாரீஷ் தாக்குதல் : பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை!
இரண்டு உலங்குவானூர்திகள் மோதிக் கொண்டதில் நால்வர் பலி!
|
|
|


