காசா மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு – இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தியது துருக்கி!

காசா பகுதியில் தாக்குதல்கள் மற்றும் உதவி வழங்குவதில் தடங்கல் ஏற்படுத்திய மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸா பகுதிக்கு தேவையான அளவு உதவிகளை தடையின்றி வழங்க இஸ்ரேல் அனுமதி வழங்கும் வரை இது தொடரும் எனவும் துருக்கியின் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான வர்த்தக பரிவர்த்தனை கடந்த ஆண்டு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் சர்வாதிகாரியாக செயற்படுவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலண்டனில் இருந்து வந்த148 பேர் தொடர்பில் விசேட நடவடிக்கை!
இலங்கையர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆய்வு - உலக சுகாதார ஸ்தாபனம், UNICEF மற்றும் சுகாதார அமைச்சு...
போஷாக்குடன் கூடிய குறைந்த விலையில் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவ...
|
|