காசா பகுதியில் உள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய 27 தொன் மனிதாபிமான உதவிகளை வழங்கும் ரஷ்யா!
Thursday, October 19th, 2023
காசா பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும்பாலும் உணவுப் பொருட்கள் அடங்கிய 27 தொன் மனிதாபிமான உதவிகளை வழங்கும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானம், ராஃபா எல்லையில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள வடக்கு சினாயில் உள்ள எகிப்திய நகரமான எல் அரிஷுக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
காசாவுடனான சீல் செய்யப்பட்ட எல்லையை மீண்டும் திறக்க எகிப்தின் ஜனாதிபதி ஒப்புக்கொண்டதை அடுத்து, உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 20 டிரக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இன்ஸ்டர்கிரேம் கணக்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை!
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் - விவசாய அமைச்சு...
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்ச...
|
|
|


