காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம்வான் வழித் தாக்குதல் – 29 பேர் உயிரிழப்பு!
Wednesday, July 10th, 2024
காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்.
காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல் – அவ்டா பாடசாலையை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலின் போது சுமார் 2,000 பேர் பாடசாலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4ஆவது பாடசாலை இதுவாகும்.
இந்தத் தாக்குதலை மோசமான கொலை எனத் தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
42 மொழிகள் அழிந்துபோகும் அபாயத்தில்!
போதைப் பொருட்களுடன் பிடிபட்ட நீர்மூழ்கி கப்பல்!
நாட்டில் இதுவரை இரண்டு இலட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு - தேச...
|
|
|


