கலிபோர்னியாவில் காட்டுக்கு தீ வைத்தவருக்கு 20 ஆண்டு சிறை! 6 கோடி டாலர் அபராதம் விதிப்பு!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒருவர் காட்டுக்கு தீ வைத்தார். தீப்பற்றி எரியும் போது அதன் மத்தியில் தான் நின்று கொண்டு அதை வீடியோ படமாக எடுத்தார். ஒரு மாதம் எரிந்த அந்த தீயில், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவு காடுகள் சாம்பலாயின. பல வீடுகள் எரிந்தன. பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெயரும் நிலை ஏற்பட்டது. காட்டுக்கு தீ வைத்த நபர் வெய்ன் ஆலன் ஹண்ட்ஸ்மேன் என தெரிய வந்ததையடுத்து. அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது அங்குள்ள நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற விசாரணையின்போது அவர் முதலில் குற்றத்தை மறுத்தார். பின்னர் ஒப்புக்கொண்டார். அப்போது அவர், ‘‘நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில் காட்டுக்கு நான்தான் தீ வைத்தேன்’’ என்றார்.
இதையடுத்து அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 6 கோடி டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தொகை, தீயினால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படகின்றது.
Related posts:
|
|