கனேடிய விமான சேவையில் இருந்து சீ 130 ஈ விமானம் நிறுத்தம்!

கனடாவில் நீண்ட காலமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்ட சீ 130 ஈ ஹேர்க்கூலீஸ் விமான உத்தியோகபூர்வமாக பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
குறித்த விமான இறுதியாக நியூ ஜேசி தலைநகர் இட்ரென்டனில் இருந்து ஒட்டாவாவிற்கு பயணம் மேற்கொண்டதாக கனேடியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மிகப் பெரிய இராணுவ போக்குவரத்து விமானமான சீ 130 ஈ ஹேர்க்கூலீஸ், 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
ஒட்டாவா ரொக்கிளிப் விமான நிலையத்தில் இறுதியாக தரையிறக்கப்பட்ட குறித்த விமானம், தற்போது கனடாவின் விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி அருக்காட்சியகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விமானம் அருங்காட்சியகத்தின் நிரந்தர சேகரிப்பு பொருளாக காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிவப்பு சமிக்ஞை கொண்ட வாகனம் பயன்படுத்த அரசியல்வாதிகளுக்கு தடை - இந்திய அரசு!
ட்ரம்ப் – புடின் கலந்துரையாடல்
மொசூல் நகரை மீட்ட ஈராக் இராணுவம்!
|
|