கனடா – இந்தியா முறண்பாடு – இந்தியாவிலிருந்து 41 கனேடிய தூதர்கள் வெளியேற்றம்!
Friday, October 20th, 2023
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களையடுத்து இந்தியாவிலிருந்து 41 கனேடிய தூதர்கள் வெளியேறியுள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தமது நாட்டிலுள்ள கனேடிய தூதர்களை மீண்டும் கனடாவுக்கு அழைக்குமாறு உத்தரவிட்டிருந்ததுடன், அவ்வாறு செயற்படா பட்சத்தில் குறித்த தூதர்களின் தகுதி நீக்கப்படம் என்றும் இந்திய அரசு எச்சரித்திருந்தது.
இதனையடுத்து இந்த செயல் அனைத்துலகச் சட்டத்தை மீறும் செயல் என்று கனடா குற்றிம் சுமத்தியிருந்தது.
கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி கனடாவில் வசித்துவந்த சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜாரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலையில் இந்திய புலனாய்வு அமைப்பிற்குத் தொடர்பிருக்கிறது என்றும் கனடா குற்றம்சாட்டியதுடன், இந்திய உயர் அதிகாரிகளை வெளியேறவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்குப் பதிலடியாக இந்தியா, 41 கனடிய தூதர்களை வெளியேறும்படி கூறியது. இந்நிலையில், கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி, பல கனடிய தூதர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவைவிட்டு வெளியேறியிருப்பதை நேற்று உறுதி செய்தார்.
இந்தியாவில் உள்ள 21 தூதர்களைத் தவிர மற்றவர்களுக்கு அக்டோபர் 20 ஆம் திகதி தூதருக்குரிய தகுதி விலக்கப்படும் என்று இந்தியா கூறியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


