கனடாவில் 7.5 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

Friday, March 24th, 2017

கனடாவில் எதிர்வரும் காலத்தில் 1.5 மில்லியன் தொடக்கம் 7.5 மில்லியன் வரையிலான தொழிலாளர்கள் தமது வேலையினை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தன்னியக்கமாக்கல் முறைமையினாலேயே குறித்த தொழிலாளர்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய வேலைவாய்ப்பு மற்றும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்காக தயாரிக்கப்பட்ட ஆவணங்களிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பல தொழிற்துறைகளில் வேலைப்பழுவை குறைப்பதற்கும், வேலையினை இலகுபடுத்துவதற்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் பலர் தனது வேளையினை இழக்கின்றனர்.

Related posts: