கனடாவில் விமான விபத்து : மூவர் பலி!

Thursday, August 2nd, 2018

கனடாவின் பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்டில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்ராறியோவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் எந்தவித கோளாறுகளும் இன்றிப் பயணித்து தரையிறங்கும் போது ஓடுபாதைக்கு அருகே வீழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த மூவரும் சம்பவத்தின் போதே உயிரிழந்துவிட்டதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து கனடாவின் எல்லைப் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்த விசாரணைகளை, கனடாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: