கட்டார் சர்ச்சை ரமழான் மாதத்தின் முடிவிலேனும் தீர்க்கப்பட வேண்டும் – எர்டோகன்!
Monday, June 12th, 2017
கட்டார் மற்றும் ஏனைய அரபு நாடுகளுக்கு இடையில் தலைதூக்கியுள்ள சர்ச்சைகள் ரமழான் மாதத்தின் முடிவிலேனும் தீர்க்கப்பட வேண்டும் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெவ்லட் கவுசோக்குளு குறிப்பிட்டுள்ளார்.
பஹ்ரேன் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் காலிட் பின் அஹமட் பின் மொஹமட் அல் கலீஃபா (Shaikh Khalid bin Ahmed bin Mohammed Al Khalifa) மற்றும் தையீப் எர்டோகனுக்கும் இடையில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே எர்டோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பஹ்ரேன் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் காலிட்டுடனான கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மெவ்லட், “கட்டார் சர்ச்சையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது தொடர்பில் துருக்கி அக்கறை செலுத்தும்” என தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பஹ்ரேன் வெளியுறவு அமைச்சர், “கட்டாரை ஒதுக்கிப் புறந்தள்ளி வைத்தமைக்கான காரணம் தொடர்பில் நான் எர்டோகனிடம் எடுத்துரைத்தேன். இனிவருங்காலங்களிலும் கட்டார் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாது என்பதற்கு உத்தரவாதம் வேண்டும்” என தெரிவித்தார்.
Related posts:
|
|
|


