கடும் மழை – இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!
Saturday, August 3rd, 2019
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு சாலைகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டெர்பிஷையர் நகரங்களில் பெய்த கனமழை காரணமாக வேஹிலி அணையில் பயங்கர விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் 6 ஆயிரத்து 500-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related posts:
தலைவர்களுடன் முதல்வர் ஜெயலலிதா: அரிய புகைப்படங்கள்..............!
சிறுமிகள் மீது பாலியல் வன்முறை: மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி !
இரு நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
|
|
|


