கடும் குளிர் : இதுவரை 55 பேர் உயிரிழப்பு!

Saturday, March 3rd, 2018

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், புகையிரத சேவைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய தரைக்கடலின் தெற்கு பகுதி வரை வழக்கத்திற்கு மாறான குளிர் உணரப்பட்டது. கடும் குளிர் காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளதுடன், அதில் 21 பேர் போலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பனிப்புயல் கடந்து செல்லும் வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு அயர்லாந்து பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts: