கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 வீதம் அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
Monday, December 25th, 2023
உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அண்மைக் காலத்தில் புதிய வகை கொரோனா திரிபான ‘ஜெஎன்.1’ மற்றும் ஒமிக்ரோன் ‘பிஏ.2.86’ வேகமாக பரவி வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“கடந்த 28 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 8.50 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 8 வீதம் உயிரிழப்பு அதிகரித்துள்ளது’ என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் சுமார் 1.18 இலட்சம் பேர் மருத்துaவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில், 1,600 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 17 ஆம் திகதி நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை மொத்தம் 77.2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


