ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு பொது இடங்களில் புகை பிடிக்க தடை!

ஜப்பானில் அடுத்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் நேற்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டத்தின்படி பாடசாலைகள், மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாகாண அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மேற்கூறிய அனைத்து அமைப்புகளிலும் இந்த சட்டம் முறையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அது தவறும் பட்சத்தில் அதன் நிர்வாகிகளுக்கு 5 லட்சம் யென் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தடையை மீறி புகைபிடிக்கும் நபர்கள் 3 லட்சம் யென் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீனா - பிரேசிலுக்கிடையிலான உறவில் முன்னேற்றம்!
வடகொரியாவிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை - தென் கொரியா!
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற சந்நிதியான் இரதோற்சவம்!
|
|