ஒலிம்பிக் டிக்கெட் மோசடி: கைதான அதிகாரிக்கு எதிராக புதிய ஆதாரங்கள்!
Thursday, August 25th, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியை பார்வையிட அளிக்கப்பட்ட அனுமதி சீட்டுகளை அதிக விலைக்கு ஒரு நிறுவனத்திற்கு மறுவிற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த அதிகாரி பேட்ரிக் ஹிக்கி தொடர்பாக புதிய ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளதாக பிரேசில் போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அயர்லாந்தின் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான ஹிக்கி கடந்த வாரம் கைது செய்யபட்டர். அவர் ரியோவில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரியோவில் உள்ள போலிஸ் அதிகாரிகள் ஹிக்கியும் டி.எச்.ஜி.ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருக்கும் இடையில் அனுமதி சீட்டு விற்பனை குறித்து நடைபெற்ற இணையத் தகவல் பரிவர்த்தனைகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஆனால் இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.
Related posts:
சல்மான் கான் விடுதலை!
ஜெயலலிதாவின் வாரிசு யார்?
தமிழகத்தை அச்சுறுத்தும் "நிவர்" இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்!
|
|
|


