ஒரு பவுண்ட் நாணயங்கள் செல்லாது: பிரித்தானியா !
Wednesday, January 4th, 2017
பழைய ஒரு பவுண்ட் நாணயங்கள் இனி செல்லாது என்று பிரித்தானியா அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது 1.3 பில்லியன் மதிப்பிலான நாணயங்கள் மக்களிடம் புழக்கத்தில் உள்ளது. இதில் 433 மில்லியன் மதிப்பிலான பழைய 1 பவுண்ட் நாணயங்களை திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளது.
பழைய நாணயங்களை வரும் அக்டோபர் மாதம் 15ம் திகதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய நாணயங்களை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பழைய ஒரு பவுண்ட் நாணயங்கள் 1983ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டவை.
போலி நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், புதிய ஒரு பவுண்ட் நாணயங்கள் மார்ச் மாத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நாணயங்கள் வெளிவட்டத்தில் தங்க நிறத்திலும், உள்வட்டம் வெள்ளி நிறத்திலும் இருக்கும் என பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.

Related posts:
|
|
|


