ஒபாமா – புடின் திடீர் சந்திப்பு: சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!
Wednesday, November 23rd, 2016
ஆசிய – பசுபிக் பொருளாதார நாடுகளின் மாநாடு தென்அமெரிக்க நாடான பெருதலைநகர் லிமாவில் நடந்து வருகிறது. கடந்த சில அண்டுகளாக எதிரெதிர் துருவங்களாக திகழ்ந்து வரும் அமரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி புடினும் மாநாட்டில் நேற்று முன்தினம் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. அப்போது இருவரும் பரஸ்பர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறும் முன்பாக ஒபாமா புடினை அதிபாரப்பூர்வமாக சந்திப்பது இதுவே கடைசி முறையாகும். இரு தலைவர்களும் சிறிது நேரமே சந்தித்தாலும் சிரிய விவகாரம் முதல் பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

Related posts:
ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு ஆறு ஆண்டு சிறை!
இத்தாலி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கியது : 100 பேர் பலியாகியிருக்கலாம் என அச்சம்!
தீவிரவாத தாக்குதல்களினால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் பலி!
|
|
|


