ஒட்டாவாவுக்கு பயணித்த விமானம் தரையிறக்கம்!

கனடா வான்கூவர் நகரிலிருந்து ஒட்டாவா நோக்கி பயணம் செய்த விமானம் தண்டர் பே சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
WS142 என்ற குறித்த விமானத்திற்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையைத் தொடர்ந்தே தண்டர் பே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற வெடிபொருள் தொடர்பான அச்சுறுத்தலை தொடர்ந்து தறையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் விமானத்தில் பயணித்த 125 பயணிகளும் பாதுகாப்பாக உள்ள நிலையில், விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
அமெரிக்காவில் எச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி: டிரம்ப் அரசு முடிவு!
ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை!
பணி நேரத்தின் போது ஐ போன் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் – அனைத்து அரச ஊழியர்களுக்கும் சீன அரசு பணிப...
|
|