ஐ.நா. அழைப்பை நிராகரித்தது ஆயுதக்குழு!
Saturday, October 8th, 2016
சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து வெளியேறுவதற்கு ஐ.நா. விடுத்த அழைப்பை இஸ்லாமியவாத ஆயுதக்குழுவினர் நிராகரித்துள்ளனர்.
முன்னதாக அல் கையீதாவுடன் இணைந்திருந்த நுஸ்ரா முன்னணி படைப்பிரிவுகளின் 900 ஆயுதக்குழுவினருக்கு அவர் இந்த அழைப்பை விடுப்பதாக ஐநாவின் சிரியா தூதர் ஸ்டாஃபான் டி மிஸ்துரா தெரிவித்திருந்தார்.அவர்கள் பின்வாங்குவதாக இருந்தால், அலெப்போவின் கிழக்குப் பகுதியில் ரஷியாவின் ஆதரவோடு சிரியாவின் அரசுப் படையினர் தொடுக்கும் தாக்குதலை நிறுத்தலாம் என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால், அலெப்போவில் அதனுடைய படைப்பிரிவுகள் இறப்பதற்கு தயாராக இருப்பதாகவும், கௌரவக் குறைவான சரணடைதல் இருக்காது என்றும் இந்தக் குழுவின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

Related posts:
ஸ்பெயின் விவகாரம் தொடர்பாக ஜேர்மன் கருத்து!
இந்தியாவில் சக்திவாய்ந்த புவிநடுக்கம்!
மல்லையா விவகாரம்: 12% வட்டியுடன் 9,853 கோடி வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


