ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்படும் வரை போர் தொடரும் – ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
Thursday, February 1st, 2018
ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து போரிடும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த கூட்டுக்குழு கூட்டம் இடம்பெற்றது.
அதில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முதல் முறையாக உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தீவிரவாதிகள் வெறும் குற்றவாளிகள் மாத்திரமல்ல, அவர்கள் சட்டவிரோத எதிரி படையினர் போன்றவர்கள் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மக்களின் நன்மைக்காக, கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்ட ட்ரம்ப், அனைத்து மக்களுக்காக அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் எனவும் உறுதியளித்துள்ளார்.
Related posts:
ரய்ஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சூறாவளி தாக்குதலில் 50 பேர் சாவு!
ஒரே மாதத்தில் 6000 ரோஹிங்ய அகதிகள் உயிரிழப்பு!
|
|
|


