ஐரோப்பிய வெளியேற்றத்தின் பின்னரும் சுதந்திர நடமாட்டம் இருக்கும் – பிரதமர் தெரேசா மே!

Thursday, April 6th, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறிய பின்னரும் சுதந்திர நடமாட்டம் தொடர்ந்தும் அனுமதிக்கப்படலாம் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வெளியேறுவதற்கான உடன்படிக்கை எட்டப்பட்ட பின்னர் எந்தவொரு புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டுமாயின், சிறிய கால அவகாசம் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தமது நாட்டின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் தெரேசா மேயின் இந்த கருத்தானது மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தொழில் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தற்காலிகமாகவேனும் சுதந்திர நடமாட்டம் தொடர்ந்தும் அமுல் இருப்பதற்கான சாத்திய உள்ளதையே தெரேசா மேயின் இந்த கருத்து எடுத்துக்காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜோர்தான் மற்றும் சவுதி அரேபியாவிற்கான விஜயத்தின் போது ஊடகவிலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட தெரேசா மே, வர்த்தகங்கள் மற்றும் அரசாங்கங்கள் கட்டமைப்புக்களை சரிசெய்யும் சிறிதுகால அவகாசம் தேவை என குறிப்பிட்டிருந்தார்.

Related posts: