ஐரோப்பா சென்ற படகு விபத்து – 84 பேர் மாயம்

Monday, May 2nd, 2016

லிபிய கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்று மூழ்கியதில் 84 பேர் காணாமல் போயுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக இத்தாலிய கடலோர காவற்படைக்குச் செயற்கை கோள் தொலைபேசி மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து இத்தாலிய கடலோர காவற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 26 பேர் மீட்கப்பட்டு இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் 100 முதல் 120 பேர் பயணித்துள்ளதாக கடலோர காவற்படை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் லம்பெடுசா தீவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் இந்த ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில் சுமார் 27 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் லிபியாவிலிருந்து படகு மூலம் இத்தாலியைச் சென்றடைந்துள்ளனர்.

பால்கன் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், படகு மூலம் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் குறைந்தது 800 புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்திய தரைக்கடலில் மூழ்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது

Related posts: