ஐந்தாவது முறையாகவும் பங்களாதேஷின் பிரதமராக ஷேக் ஹசீனா தேரிவு!
Monday, January 8th, 2024
பங்களாதேஷ் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,
இதேவேளை அவரவின் கட்சியானது 50 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த தேர்தலானது பல்வேறு நாடுகளையும் சோ்ந்த 125 அதிகாரிகளின் மேற்பாா்வையில் நடைபெற்றதோடு இத்தோ்தலில் வாக்களிக்க 11.96 கோடி போ் தகுதி பெற்று இருந்தனர் .
இதேவேளை பங்களாதேஷின் பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பது இது ஐந்தாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்தோ்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான எதிா்க்கட்சியினா் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்பதாக 1996 ஆம் ஆண்டில் முதல் முறையாக பங்களாதேஷின் பிரதமரான ஷேக் ஹஷீனா 2009 ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றார்.
தற்போது அவர் ஐந்தாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் குறித்த தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் பல பகுதிகளில் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன.
இதன் விளைவாக 16 பேர் கொல்லப்பட்டதுடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


