ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 17 பேர் பலி!
Friday, June 21st, 2019
ஏமனில் அரச படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில், ஹவுத்தி கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்காக போரிடும் அரச படைகளுக்கு ஆதரவாக, சவுதி அரேபிய கூட்டுப்படையும் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், தாயிஸ் மாகாணத்தில் அரச படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே நேற்று இடம்பெற்ற மோதலில் கிளர்ச்சி படையைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டதாகவும், அத்துடன், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏமனில் கடந்த 2014ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் இடம்பெற்று வருகிறது. அரசப் படைகளுக்கும், ஹவுத்தி கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே இடம்பெறும் இந்தப் போரில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
இந்தோனேஷியவில் நிலச்சரிவும்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு!
1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மாற்றம் இது !
துஷ்பிரயோகம் மற்றும் கடும் தண்டனைகளை அனுபவித்தோம் - இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனிய தெரிவிப்ப...
|
|
|


