ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் 18 பேர் பலி!

Thursday, September 22nd, 2016

ஏமனில் போராளிகள் வசமுள்ள துறைமுக நகரமான ஹோடெய்டாவில் சவுதி  தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் பொதுமக்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்பலர்  காயம் அடைந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அன்று, ஹூதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அதிபர் மாளிகையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், மாளிகைக்கு அருகே இருந்த வீட்டின் மீதும் ஏவுகணைகள் விழுந்தன.இந்த தாக்குதல் நடந்த காட்சியை, ரத்தகளறி என்று அங்குள்ள குடியிருப்போர்கள் வர்ணித்துள்ளனர்.

வான்வழித்தாக்குதல்களால் நிகழ்ந்த அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மரணங்கள் காரணமாக செளதி தலைமையிலான கூட்டு படையினர் கடும் விமர்சனங்ளை எதிர்கொண்டுள்ளனர்.

சவுதி ஆதரவு தரும் ஏமன் அரசு மற்றும் போராளிகளுக்கு இடையே ஆன மோதலை நிறுத்த நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த மாதம் முறிந்தது போயின. குறிப்பிடத்தக்கது.

_91335641_04610dbc-c112-417b-b07a-01ad6f1aa76f

Related posts: