அமெரிக்க விமானங்களில் இலத்திரனியல் பொருட்களை கொண்டு செல்லத் தடை!

Wednesday, March 22nd, 2017

அமெரிக்க விமானங்களில் இலத்திரனியல் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கின் குறிப்பிட்ட சில நாடுகள் மற்றும் ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு பயணிக்கும் பயணிகளின் மடிக்கணனிகள் மற்றும் tab எனப்படும் கைக் கணினிகளை சோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை நோக்காக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் இந்த புதிய தடை தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒரு பிரிவான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகமும் இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக எந்தெந்த விமான நிலையங்களில் இந்த தடை அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பிலும் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது தொடர்பிலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Related posts: