எழுத்தாளர் பால் பேட்டிக்கு மான் புக்கர் விருது!

Wednesday, October 26th, 2016

அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் பால் பேட்டி, ‘தி செல் அவுட்'(The Sellout) என்ற புதினத்திற்காக மான் புக்கர் விருதைப் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிட்டன், அயர்லாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு மட்டுமே இந்தப் பரிசு வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புதினங்களுக்கான மதிப்புமிக்க விருது ஒரு அமெரிக்கருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க குடும்பத்தைச் சேர்ந்த பால் பேட்டியின் புதினம், இனம் மற்றும் இனவாதத்தை நையாண்டி கண்ணோட்டத்தில் பார்த்து எழுதப்பட்டுள்ளது. தனது சுற்றுப்புறப் பகுதியில், அடிமைத்தனம் மற்றும் இனப் பிரிவினை அமைப்புக்கு புத்துயிரூட்ட முயற்சிக்கும் ஒரு நகர்ப்புற விவசாயி தான் இந்தப் புத்தகத்தின் முக்கிய கதாபாத்திரம்.இந்தப் புதினம் , புதிய நவீன நையாண்டி வகையைச் சேர்ந்தது. இது இனவாதம் என்ற பிரச்சனையை அறிவு, பெரும் ஆர்வம் மற்றும் கடுமையான எச்சரிக்கை தொனி’ போன்றவற்றைக் கொண்டு அணுகியுள்ளது என புக்கர் விருதுக்கான குழுவின் தலைவர் இந்த புதினத்தைப் பற்றி விவரித்தார்

_92091391_one

Related posts: