எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட டிரம்ப் உத்தரவு – மெக்சிகோ அதிபர் கடும் கண்டனம்!
Friday, January 27th, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, தான் வெற்றி பெற்றால் மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதன்படி அவர் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர்,அதற்கான உத்தரவை பிறப்பிததுள்ளார்.
ஆனால் இதற்கு மெக்சிகோ தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்காவின் தடுப்புச்சுவர் நடவடிக்கைக்கு மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர், ‘‘சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை. நான் இதை பல முறை கூறி விட்டேன். இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது’’ என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘எல்லையில் சுவர் கட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை என்னை வருத்தத்துக்கு ஆளாக்கி உள்ளது. இது நம்மை சேர்ப்பதற்கு பதிலாக பிரித்து விடும்’’ எனவும் தெரிவித்தார். இதற்கிடையே டிரம்பை சந்திப்பதற்காக நாளை (சனிக்கிழமை) வாஷிங்டனுக்கு என்ரிக் பெனா நீட்டோ மேற்கொள்ள உத்தேசித்துள்ள பயணத்தை ரத்து செய்ய அவருக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.
இருப்பினும் இதில் அமெரிக்க தலைநகரத்தில் உள்ள மெக்சிகோ பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையைப் பெற்றும், கவர்னர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனையைக் கலந்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என என்ரிக் பெனா நீட்டோ கூறினார்.

Related posts:
|
|
|


