எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யா – முடிவுக்குப் பதிலளிக்க தயார் என்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

Sunday, September 4th, 2022

ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போருக்கு இடையே தன்னை மிரட்ட எரிவாயுவை ரஷ்யா ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என ஐரோப்பா குற்றம் சாட்டியுள்ளது.

நீராவி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்டுள்ள சேதம் சரிசெய்யப்படும்வரை நோர்ட் ஸ்ட்ரீம் 01 எரிவாயுக் குழாய் மூடப்பட்டிருக்கும் என ரஷ்ய அரசாங்கத்தின் காஸ்ப்ரோம் நிறுவனம் தெரிவித்தது.

அந்தக் குழாய் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து பால்ட்டிக் கடல் வழியாக ஜெர்மனி வரை செல்கிறது.

தற்போது போதுமான அளவு எரிவாயு இருப்பில் உள்ளதாக கூறியுள்ள பெர்லின், அந்த நிலைமை மோசமடையும் சாத்தியம் உள்ளதையும் மறுக்கவில்லை என்றும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதிசெய்ய விசேட கலந்துரையாடல் - லிட்ரோ தலைவர் தெரிவிப்பு!
எரிபொருள் வழங்கலில் முறைகேடா - பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்!
டிப்பரில் மணலை கடத்தியவர்கள் செயலால் தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம் - சிறுப்பிட்டி பகுதியில் போக்குவ...

மக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டால் சமுர்த்தி வங்கி அரச வங்கியுடன் இணைக்கப்படும் - அமைச்சர் தயா கமகே எ...
மலையகத்தில் கடும் மழை - நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – மக்களுக்கு கடும் எச்சரிக்கை!
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் - இலங்கை மின்சார சபையின் 17 பணியாளர்கள் சே...