எரிபொருள் தாங்கி வெடிப்பு – தன்சானியாவில் 35 பேர் பலி!
Monday, August 12th, 2019
தன்சானியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 35 பேர் உயிரிழந்ததாகவும் 65 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
வீதியில் கவிழ்ந்த வாகனத்திலிருந்து எரிபொருளை மீட்க மக்கள் முயற்சித்ததாகவும் இதன்போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் டார் எஸ் சலாம் நகருக்கு மேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள மொரோகோரோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீனாவிற்கு அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப்!
ஈராக்கில் கோர தாக்குதல் - 30 பேர் பலி - 50 பேர் படுகாயம்!
ஆடையில் வெள்ளைத் துணி அவசியம் - ரஷ்ய இராணுவம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
|
|
|


