எம் எச் 370 விமானத்தின் பாகம் ஆய்வுக்காக ஆஸ்திரேலியா சென்றது!

Monday, March 21st, 2016

மாஸ் நிறுவனத்தின் காணாமல் போன  எம்எச் 370 பயணிகள் விமானத்திற்கு உரியது என நம்பப்படும் சிதைந்த இரண்டு பாகங்கள் ஆய்வுக்காக ஆஸ்திரேலியாவுக்குக் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விரு பாகங்களும் மொசாம்பிக் நாட்டின் கடலோரத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.இந்தச் சிதைந்த பாகங்களில் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் மற்றொரு பாகத்தை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒரு வரும் கண்டுபிடித்தனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம்  கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்று கொண்டிருந்த போது 239 பயணிகளுடன் காணாமல் போனது. நீண்ட காலமாகத் தேடும் பணி நீடித்துவரும் நிலையில், ஓரிரு சிதைந்த பாகங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாகங்கள், எம்.எச் 370 விமானத்தைப் போன்ற அதே ரகமான போயிங் 777 விமானத்தின் சிதைந்த பாகமாக இருக்கும் சாத்தியம் கூடுதலாக இருப்பதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

போயிங் விமான நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் ஆஸ்திரேலியா தற்போது சிதைந்த பாகங்கள் குறித்த ஆய்வைத் தொடங்கவிருக்கிறது. இதுவரையில் இந்திய பெருங்கடல் தீவான ரீயூனியனில் கண்டுடிக்கப்பட்டுள்ள ஒரு விமானத் துண்டுதான் கிட்டத்தட்ட காணாமல் போன விமானத்துடன் பொருந்தி வருபவதாகக் கருதப்படுகிறது.

Related posts: