எகிப்தில் படகு படகு உயிரிழந்தோர் எண்ணிக்கை 202 ஆக அதிகரிப்பு!
Wednesday, September 28th, 2016
எகிப்தில் அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.
எகிப்து, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றிச்சென்ற படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்தது.கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் 169 பேர் உயிரிழந்திருந்தனர். படகில் 500 க்கும் அதிகமானோர் பயணம் செய்திருந்ததால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது.
இந்நிலையில், கடலில் மூழ்கிய படகை மீட்புக்குழுவினர் போராடி மீட்டபோது, அதிலிருந்து 33 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், எகிப்து படகு விபத்தில் இதுவரை 202 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, IOM எனப்படும் சர்வதேச இடம்பெயர்தல் அமைப்பு 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.

Related posts:
சைப்ரஸை ஒருங்கிணைக்கும் முயற்சியில் கிரீஸ் மற்றும் துருக்கி ஆர்வம்!
தொற்று நோய்களால் மார்ச் மாதத்தில் 1859 பேர் உயிரிழப்பு!
உலக வங்கி - சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் ஆரம்பம்!
|
|
|


