ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை: சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் பின்னணியில்!!
Thursday, June 20th, 2019
ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் மரணத்தின் பின்னணியில் சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மன் மற்றும் அவரது உயர் மட்ட அதிகாரிகள் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜமால் கஷூஷோகி இஸ்ரான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதுவராலயத்திற்குள் வைத்து கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மூடிய கதவுகளுக்கு அப்பால், 11 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
விசாரணை முடிவில் அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த ஊடகவியலாளரின் கொலை தொடர்பாக சர்வதேச நடைமுறை பின்பற்றப்படவில்லை என பல மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முதல்முறையாக இரு சுற்றுப் பாதைகளில் செயற்கைக் கோள்களை நிறுத்திய இந்தியா
பணிப்புரைகளை ஏற்கப்போவதில்லை - கட்டலோனிய தெரிவிப்பு !
பத்திரிகையாளர் கஷோஜியின் உடல் கழிவுநீருடன் வெளியேற்றம்? துருக்கி நாளிதழ் அதிர்ச்சித் தகவல்!
|
|
|


