உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா 126 ஆவது இடம் – தவறான கணிப்பு என்கிறது ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா!

Sunday, April 9th, 2023

2023 உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா 126ஆவது இடத்தில் தவறாக இடம் பெற்றுள்ளமை என்பது, தவறான கணிப்பு என்று ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியாவின் ஆராய்ச்சி அறிக்கையான எகோர்வாப் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சி அறிக்கையின்படி போர் சூழந்துள்ள யுக்ரைன் 92ஆவது இடத்திலும், பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட இலங்கையும் பாகிஸ்தானும் முறையே 112ஆவது மற்றும் 108ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தவறான குறிகாட்டியாகும். மகிழ்ச்சியின் அடிப்படையில் இந்தியா 48ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனவே உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் இந்தியா 126ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமையை நிராகரிப்பதாக ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியாவின், குழுமத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: