உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு!

Tuesday, September 20th, 2016

காஷ்மீர் மாநிலம் உரியில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ரஷியா, பிரான்ஸ், கனடா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தனித்தனியாக ஆதரவு தெரிவித்துள்ளன.

தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு எப்போதும் துணை நிற்போம் என்றும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் சதிகாரர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நியூயார்க் நகரில் நேற்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியை சந்தித்தார். அப்போது, காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய அவர், இந்தியா–பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க தலையிடுமாறு அமெரிக்காவை கேட்டுக் கொண்டார்.

Untitled-1 copy

Related posts: